Friday , August 18 2017
  • 0
  • 0
  • 0
Home - Writings - Stories - பிரமச்சாரி கனவுகள் (U certified)

பிரமச்சாரி கனவுகள் (U certified)

Image2காலை 5.30 மணி. கவுசல்யா சுப்ரஜா என்று சுதாகர் கைபேசி அலாரம் அடித்தது. அதை போருட்படுத்தாமல் சுதாகர் மறுபுறம் திரும்பிப்படுத்தான். அதே அறையில் சிறிது தூரம் தள்ளிபடுத்திருந்த தனது ரூம்மேட் மனோகர் சத்தம் கேட்டு எழுந்து “டேய் சுதா அலாரத்த ஸ்டாப் பண்ணுடா!!! காலையில சீக்கிரம் எழுந்திருக்க முடியலனா என்டா அலாரத்தவச்சு என் தூக்கத கெடுக்கற?” என்று சுதாகரை பார்த்து கத்தினான். சுதாகர் கண்ணை திறக்காமல் தனது கைபேசி அலாரத்தை நிறுத்திவிட்டு மிண்டும் தூங்கிவிட்டான். ஒரு பத்து நிமிடம் கழித்து, மனோகர் “டேய் எருமை, என்னை அலாரம் வச்சு எழுப்பிட்டு நீ தூங்கிற? எழுந்திருடா” என்று மறுபடியும் கத்தினான்.

 சுதாகர் – “எழுந்திருக்க முடியலடா”

மனோகர் – “இந்த உலகத்துல யாருமே 5.30 எழுந்திரிக்கறதில்லையா? ”

சுதாகர் – “என்னால் முடியலடா. இப்போ சுடசுட காபி குடித்தால் தூக்கம் போயிடும். நான் வீட்டுல இருந்தா அம்மாதான் காபி கொடுத்து எழுப்புவாங்க.”

மனோகர் -” அதுனால என்ன? அடுத்த வாரம் உனக்கு கல்யாணம். பொண்டாட்டி வந்து காபி கொடுத்து. எழுப்புவாங்க”

சுதாகர் – “அப்படிங்கற? ”

மனோகர் – “இல்லையா பின்ன!!! எத்தனை சினிமாவுல பார்த்து இருக்கோம். காலையில் சிக்கிரம் எழந்து, குளிச்சு, ஈரத்தலையுடன் புருஷன் காலை தொட்டு வணங்குவாங்க. அப்புறம் வாசல் பெருக்கி  கோலம் போட்டு, பசும் பால் காய்சி, சுசடசுட பில்டர் காபியுடன் புருஷனை எழுப்புவாங்க…”

சுதாகர் உடனே “நரசுஸ் காபி விளம்பரத்துல வர மனைவி மாதரி?”

மனோகர் -” ஆமாண்டா, நீ காபியை குடிச்சிட்டு பேஷ் பேஷ் ரோம்ப நன்னனிக்குனு சொல்லு”

சுதாகர் -“அப்படி ஒரு சுடசுசுடசுட காபி போட்டுகுடுடா!!! நான் எழுந்திரிக்கிறேன்.”

மனோகர்- ” நான் என்ன உன் பொண்டாட்டியா? எழுந்திருடா நாயே” என்று திட்டிக்கொண்டு அருகில் இருந்த மேஜைவிசிரியை(fan) மறுபுறம் திருப்பினான். அங்கு இருந்த நாள் காட்டியில் சில தாள்கள் பறந்தன.

 நீங்க தமிழ் படம் பார்ப்பதில்லையா? புருஞ்சுக்கோங்க சில நாட்கள் ஓடிவிட்டன.

சுதாகருக்கு கல்யாணம் முடிந்து தனி குடித்தனம் அரம்பித்து விட்டனர். அன்று ஒரு இனிய காலை, வழக்கம் போல தனது கைபேசி 5.30 மணிக்கு அலாரம் அடித்தது. தனது அருகில் படுத்திருந்த மனைவி மாலதி படுக்கையில் இருந்து எழுந்து செல்வதை உணர்ந்துகொண்டான். பில்டர் காபியை எதிர்பார்த்து சுதாகர் மறுபடியும் படுத்துகொண்டான். எவ்வளவு நேரம் தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது. அவனது காலை யாரோ வருடுவதை உணர்ந்த சுதாகர் கண்ணை முடியபடியே எழுந்து உட்கார்ந்து, காப்பியை எதிர்பார்த்து கையை நீட்டினான்.

READ  God’s Coffee

சுதாகர்- “உம்மா, காப்பியை குடுமா!!!!”

இன்னும் தனது காலை யாரோ வருடுவதை உணர்ந்த சுதாகர் கண்ணை திறந்து பார்த்தான். தங்கள் வீட்டு நாய் தனது கால் மீது எதையோ வைத்து கடித்துக்கொண்டிருந்தது. அதை முத்தமிட்டுவிட்டு. படுக்கையில் இருந்து எழுந்து சென்று தங்கள் வீட்டு முன் கதவை செய்திதாள் எடுக்க திறந்தான். அங்கு செய்திதாள் இல்லை, அந்த இடத்தில் வாசல் பெருக்கி அழகான ரங்கோலி கோலம் போடப்பட்டிருந்தது. தனது மனைவி குளித்து ஈரத்தலையுடன் பால் காய்சி கொண்டிருப்பாள் என்ற எண்ணத்தில் திரும்பினான். அங்கே பார்த்த காட்சி…..

இந்த கதையை எப்படி முடிக்கலாம்? உங்கள் கருத்துக்களை comments ஆக பதிவு செய்யவும்.
[Total: 0    Average: 0/5]

Leave a Reply