Wednesday , August 16 2017
  • 0
  • 0
  • 0
Home - Writings - Politics - உங்கள் ஓட்டு யாருக்கு?

உங்கள் ஓட்டு யாருக்கு?

IMG_0042

தேர்த்லுக்கு 10 நாட்களே இருக்கும் வேளையில், உங்கள் ஓட்டு யாருக்கு? முடிவு செய்து விட்டீர்களா? தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் 4 – 5 அணிகளாக பிரிந்து உங்களிடம் ஓட்டு பிச்சை எடுத்து கொண்டிருக்கிறது. அந்த அணிகள்

  1. தி.மு.க + காங்கரஸ்
  2. அ.இ.அ.தி.மு.க
  3. தே.மு.தி.க கூட்டணி
  4. பி.ஜே.பி
  5. நாம் தமிழர் கட்சி

இந்த கூட்டணிகளில் யாருக்கு உங்கள் ஓட்டு? கீழ் வரும் புள்ளி விவரங்களை வைத்து தீர்மானிக்கவும்

  • இந்த கூட்டணிகளில் முதல் இரண்டு கூட்டணி கட்சிகள் மட்டுமே 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து உள்ளனர். மற்ற எந்த கட்சியும் தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி அமைக்கவில்லை. ஆட்சி புரிய இவர்களுக்கு பக்குவம் இருக்குமா?
  • முதல் இரண்டு கூட்டணி கட்சிகள் அவர்களது ஆட்சியில் நிறைய ஊழல்களை செய்துள்ளனர். மற்ற கட்சியும் செய்யாது ஏன்பதற்கு என்ன உறுதி?
  • கருணாநிதிக்கு 94 வயது. அவர் எழுந்து நடக்க முடியாது. அவர் ஆட்சி செய்யமுடியுமா? உதாரணமாக நம் வீட்டு கல்யாண வேளையை நம்ம தாத்தாவிடமா கொடுப்போம்? அறிவுரை மட்டுமே கேட்கமுடியும்.
  • ஜெயலலிதா – சர்வாதிகாரி.  எல்லாம் தானே செய்து தோற்று போனவர். தொலை நோக்கு பார்வை இல்லாதவர். சென்ற 5 ஆண்டுகளில் மின்சார தட்டுபாடு, தொழில் முடக்கம், சென்னை வெள்ளம் ஆகியவை தமிழ்நாட்டையே புரட்டி போட்டது. வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் அறிக்கையும் (தவறு செய்து) பலமுறை மாற்றியவர்.
  • விஜயகாந்த எப்போதும் குடியும் குடித்தனமாக உள்ளவர். முன்கோபி. இவரால் மத்திய அடசிடம் பேசி காரியங்களை சாதிக்க முடியமா? MLA அல்லாது எந்த அரசு பதவியும் வகிக்காதவர். முன் அனுபவம் இல்லாதவர். இவரிடம் முதல் அமைச்சர் பதவியை நம்பி கொடுக்கலாமா? சிந்திக்க வேண்டிய விஷயம்.
  • பி.ஜ.பி – தமிழக கட்சி தலைமை மிது நம்பிக்கை வரவில்லை. மத்தியில் மோடி பிரதமராக இருந்தாலும், அவர் தமிழக அட்சியை கவனிப்பார் என்பதில் நம்பிக்கை இல்லை.
  • நாம் தமிழர் கட்சியில் கட்சி தலைமையே சரியில்லை. 


இப்படி இருந்தால் பிறகு யாருக்குதான் ஓட்டு போடுவது?

  • உங்கள் தொகுதி வேட்பாளர் நல்லவரா? தன்மையுடையவரா? மந்திரிகளிடம் பேசி உங்கள் தொகுதிக்கு நல்லது செய்யக்கூடியவரா என்று பார்த்து ஓட்டு போடுங்கள்.
  • நீங்கள் ஓட்டு போடும் அந்த கட்சி முதல்வர் வேட்பாளரிடம் கீழ் கண்ட தகுதி இருக்கவேண்டும்
  • முன் அனுபவம் அல்லது திறமை
  • செயலாற்ற வயது
  • தொலை நோக்கு பார்வை
  • இலவசங்களை நம்பாது வேளை வாய்ப்புகளை உருவாக்குவது
என் சொந்த கருத்து
முதல்வராக – ஸ்டாலின்
துனை முதல்வராக – விஜயகாந்த்
இப்படி இருந்தால் தமிழகம் முன்னேற வாய்ப்புள்ளது.
உங்கள் ஓட்டு உங்கள் முடிவு.
[Total: 0    Average: 0/5]

Leave a Reply