Home - All Categories - என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா

மணிரத்தினம் படத்தில் மனைவியை பேருந்தில் எற்றிவிட்டு விட்டு “என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” என்று சந்தோசத்தில் குதிக்கும் ஜனகராஜை நமக்கு எல்லாருக்கும் தேறியும். அந்த காலத்துல தன் குழந்தைகளுக்கு எப்படா லிவுவிடுவாங்கனு காத்திருந்து தன் குழந்தைகளுடன் அம்மா வீட்டுக்கு போவாங்க. (நிறைய கல்யாணம் ஆன வீடுகளில் நிலைமை இதுதான். இதற்கு விதிவிலக்கு புதிதாக கல்யாணம் ஆன தம்பதிகள் மட்டுமே). எதுக்காக தன் அம்மா வீட்டுக்கு போனங்க? எனக்கு தெரிந்த்து இரண்டு காரணம்தான்

  1. தன்னுடைய வேளையில் இருந்து விடுப்பு (break) வேண்டும் என்பதற்காக.
  2. அம்மா சமையல் சாப்பிட்டு, தூங்கி ரேஸ்ட் எடுக்க

இது ஆண்களுக்கும் ஒரு வகையில் வசதியாகதான் இருந்தது.

  • மனைவி சமையலில் இருந்து ஒரு பிரேக்
  • பிடித்த ஓட்டலில் சாப்பிடுவது
  • நண்பர்களுடன் சினிமா
  • கூட்டாளிகளுடன் தண்ணி அடிப்பது

இது போல மனைவி இருக்கும் போது செய்ய முடியாதவற்றை செய்து தன் ஆசையை நிறைவேற்றி கொள்வார்கள். ஆனால் இந்த காலத்தில் பெண்கள் தன் அம்மா வீட்டுக்கு போறாங்களா? இல்லை என்றே சொல்ல வேண்டும். இதற்கு பல காரணங்கள் உண்டு. இதில் முதன்மையான காரணம் – இன்றைய பெண்கள் வேளைக்கு சேன்று விடுகின்றனர். அவர்களுக்கு லிவு கிடைப்பதில்லை. அப்படியே கிடைக்கும் லிவுகலில் கூட குடும்பத்துடன் சுற்றுல்லா சென்று விடுகின்றனர் அல்லது குழந்தைகளுக்கு சம்மர் கேம்ப். இதுனால ஆண்களுக்கு பிரேக் கிடைப்பதில்லை. அவர்கள் தன் நண்பர்களுடன் டிரேக்கிங், பைக் ரைடிங் என சென்று விடுகின்றனர். சிலர் தன் குழந்தைகளுடன் தன் அம்மா வீட்டுக்கு சென்றுவிடுகின்றனர்.

இனி மேல் “என் புருசன் ஊருக்கு போயிட்டான்”.

READ  அம்மா பிள்ளை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.